இந்துத்துவம் குறித்து ராகுலிடம் கற்றுக்கொள்ளும் நிலைமை ஒருநாளும் வராது - சுஷ்மா

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 01:07 pm
no-such-day-will-come-to-bjp-to-learn-about-hindutva-from-congress-leader-rahul

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்துத்துவம் குறித்து பேசியதற்கு மத்திய பா.ஜ.க அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்துத்துவம் குறித்து பிரதமர் மோடி அரைகுறையாகவே புரிந்து வைத்து பேசி வருகிறார் என விமர்சித்திருந்தார். இதற்கு சுஷ்மா சுவராஜ் பதிலடி கொடுக்கும் விதமாக அவர், "இந்துத்துவம் குறித்து ராகுலிடம் நாங்கள் கற்றுக்கொள்ளும் நாள் நிச்சயம் வராது. சமீப காலத்திய தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்குச் செல்லும்போது தன்னை ஓர் பிராமண குலத்தில் வந்தவராக ராகுல் காந்தி சித்தரித்து பேசி வருகிறார். காரணம் அவரது கொள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு பிராமணர். அதோடு அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. ராகுல் முப்புரி நூலுடன் கூடிய பிராமணர் என்கிறார்கள்.

இன்றைக்கு நாங்கள் அவரிடம் இந்துமத வாழ்வியல் மற்றும் கலாசாரம் குறித்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு அவரது பொது அறிவு விரிவடைந்துவிட்டதா? காங்கிரஸ் கட்சியில் உள்ள குழப்பத்தை அவர் முதலில் நீக்கட்டும். எதிர்க்கட்சிகள் கூட்டணி என ஒன்று இருக்கிறதா? அந்த கூட்டணி கட்சி தலைவர்கள் ராகுலை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனரா? இதுபோன்ற குழப்பங்களுக்கு முதலில் அவர் முடிவு கட்டட்டும். அதன்பின்னர் இந்துத்துவம் குறித்து ராகுல் பேசட்டும்" என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close