மதம் மாற மறுத்த ஆசிரியைக்கு நிகழ்ந்த கொடுமை!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 01:34 pm
for-not-converting-to-christianity-hindu-teacher-dismissed-from-school

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓர் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை, கிறிஸ்தவ மதத்துக்கு மாற மறுத்ததால், அவரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சிக்கு அருகே உள்ள நெம்கோமில் கர்மேல் எனும் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நளினி நாயக் எனும் ஹிந்து ஆசிரியை கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

அவரை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி, சக ஆசிரியைகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு ஆசிரியை உடன்பட மறுக்க அவர் தாக்கப்பட்டுள்ளார். இதன் உச்சமாக கடந்த செப்டம்பர் 27 -ஆம் தேதி, ஆசிரியை தமது அறைக்கு அழைத்த கல்லூரி முதல்வர், 'மதம் மாறவில்லையென்றால் கொன்றுவிடுவேன்' என நளினி நாயக்கை மிரட்டியுள்ளார்.அவரின் மிரட்டலுக்கு ஆசிரியை அஞ்சாததால், அவரை கடந்த அக்டோபர் 1 -ஆம் தேதி பணிநீக்கம் செய்து  பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும்  சகப் பணியாளர்கள் மூன்று பேர் மீது நெம்கோம் காவல் நிலையத்தில் நளினி புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ராஞ்சி நீதிமன்றம் உ்த்தரவிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close