சபரிமலை ஐயப்பன் கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 01:42 pm
section-144-to-remain-in-effect-at-sabarimala-till-4th-december

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதி அளிப்பதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி அங்கு 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதற்கு கேரள மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் அங்கு போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு வருகிற 4ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close