மூன்று வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ள நடிகர்!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 04:24 pm

not-one-not-two-but-actor-prakash-raj-has-three-voter-ids

தமிழகம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் வெவ்வேறு முகவரிகளில் மூன்று வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மதவாதத்தை பரப்பி வருவதாக விமர்சித்து வருகிறார். சபரிமலை விவகாரத்தில் இவரது கருத்துகள் ஹிந்துக்கள் மீதான அவரின் வெறுப்புணர்வை பிரதிபலிப்பதாக இருந்தது.
பிரதமர்  மோடியின் தலைமையில் இந்திய அரசமைப்புச் சட்டமும், ஜனநாயகமும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பிரகாஷ் ராஜ் கூறியிருந்தார்.

நாட்டின் அரசமைப்புக்கு சட்டத்தைப் பற்றி கவலைப்படும்  இவர், சட்டத்துக்கு புறம்பாக, மூன்று வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெகன்குமார், சதீஷ் ஆகியோர் அளித்துள்ள இந்த புகாரில்,  'தமிழகத்தின் தலைநகரான சென்னையில், வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் இரு இடங்களிலும், தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு இடத்திலும் என மூன்று வெவ்வேறு முகவரிகளில் நடிகர் பிரகாஷ் ராஜின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதாவது வெவ்வேறு முகவரிகளில் அவரிடம் மூன்று வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. இதுதொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close