குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டிசம்பர் 10ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 11:28 am
parliament-winter-session-2019-opposition-parties-meeting-will-be-held-on-dec-10

குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருப்பதையொட்டி, அதற்கு முன்னதாக வருகிற டிசம்பர் 10ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருவதால் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு சமீபத்தில் தான் அறிவித்தது. 

அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11ம் தேதி தொடங்கி, ஜனவரி 8ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக எதிர்கட்சிகள் டிசம்பர் 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close