இந்தியாவிலேயே வேகமான ரயில்; புதிய சாதனை!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 05:34 pm
train-18-crosses-180-kmph-mark

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள 'ரயில் 18' எனப்படும் எஞ்சின் இல்லாத புதிய நவீன ரயில், சோதனையின் போது, 180 கிமீ வேகத்தை கடந்து இந்தியாவிலேயே மிக வேகமான ரயில் என்ற சாதனையை படைத்துள்ளது. 

சுமார் 100 கோடி செலவில், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ரயில் 18. அநேகமான பாகங்களை இந்தியாவிலே தயாரித்து, சென்னையில் உள்ள ஐ.சி.எஃப்-பில் இந்த ரயில் உருவாக்கப்பட்டது. எஞ்சின் இல்லாமலேயே, முழுக்க மின்சாரத்தில் இயங்குமாறு இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் இதில் 16 பெட்டிகள் உள்ள நிலையில், அனைத்திலும் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி, இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கடைசி கட்ட சோதனைகளில் உள்ள இந்த ரயில், சமீபத்தில் 180 கிமீ வேகத்தை கடந்து இந்தியாவிலேயே மிக வேகமான ரயில் என்ற சாதனையை படைத்துள்ளது. தண்டவாளங்கள், சிக்னல்கள் என சரியான ஏற்பாடுகள் அமைந்தால், இது 200 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாம். 

வரும் ஜனவரி மாதம் முதல் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வருகிறது. முதலாவதாக சதாப்தி ரயிலுக்கு பதிலாக இந்த ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமாம். இந்த நிதியாண்டில் மேலும் ஒரு ரயில் 18 உற்பத்தி செய்யப்படும் என்றும், அடுத்த நிதியாண்டிற்குள் 4 ரயில்கள் உருவாக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close