இந்திய - அமெரிக்க விமானப்படைகள் 12 நாட்கள் கூட்டு பயிற்சி!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 07:24 pm
indian-us-air-force-in-12-day-joint-exercise

அமெரிக்க விமானப்படையுடன் இந்திய விமானப்படை சேர்ந்து நாளை முதல் 12 நாட்களுக்கு 'எக்ஸ் கோப் 18' என பெயரிடப்பட்டுள்ள கூட்டு பயிற்சி முகாமில் ஈடுபடுகின்றன.

எக்ஸ் கோப் என்ற பெயரில் இந்திய மற்றும் அமெரிக்கா விமானப்படைகள் கூட்டு பயிற்சி முகாம்களில் ஈடுபட்டு வருகின்றன. 4வது முறையாக நடைபெறும் இந்த பயிற்சி முகாம், நாளை துவங்குகிறது. 12 நாட்களுக்கு இந்த கூட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 

மேற்கு வங்கத்தின் கலைகுண்டா மற்றும் பனகர் பகுதிகளால் அமைந்துள்ள விமானப்படை தளங்களில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இரு நாட்டு விமானப்படை பயன்படுத்தும் சிறந்த யுக்திகளை பரிமாறிக்கொண்டு, அதன் மூலம், இரு நாடுகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த இந்த பயிற்சி உதவும் என அரசு தெரிவித்துள்ளது. 

பன்னிரண்டு எஃப்-15 போர்விமானங்கள் மற்றும் மூன்று சி-130 ராணுவ விமானத்துடன் அமெரிக்கா இந்த பயிற்சியில் கலந்து கொள்கிறது. Su-30 MKI,  ஜாகுவார், மிராஜ் 2000, C-130J மற்றும் AWACS விமானங்களுடன் இந்தியா இதில் கலந்து கொள்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close