''மோடி கேர்' திட்டத்தால் மாபெரும் வளர்ச்சி'- சிஐஐ மாநாட்டில் பெருமிதம் 

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 09:35 am

shri-pradhan-says-that-the-government-has-brought-about-paradigm-shift-in-the-healthcare-sector

அரசு சுகாதாரத்துறையில் 'மோடி கேர்' என அழைக்கப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நாட்டில் பாதிக்கும் மேலான மக்கள் பலன் பெறுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 

தேசிய சுகாதாரத்துறையில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.

டெல்லியில் சிஐஐ ஏற்பாடு செய்திருந்த 15வது சுகாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைவரும் அணுகக்கூடிய வகையில் திடமான சுகாதாரத்தை வழங்குவதற்காக சிறந்த திறன், சக்தி மற்றும் வளங்களை  ஒருங்கிணைத்து, தொழில் முனைவோர் மாதிரியை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், மோடி கேர் என்று பிரபலமாக அழைக்கப்படும் ''ஆயுஷ்மான் பாரத்'' என்ற மிகப் பெரிய திட்டம் மாநிலங்கள் மூலம் அமலாக்கம் செய்யப்படுவதால், நாட்டின் பாதி மக்கள் தொகைக்கு சுகாதார வசதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம், சுகாதாரத் துறைக்கு பெருமளவில் ஊக்கமளித்துவரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து வரும் நோயாளிகளுக்கு, குறிப்பாக, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து வரும் நோயாளிகள் இந்தியாவில் சிகிச்சை பெற விரும்புவதாக அவர் கூறினார். இந்த துறையில் ஏற்றுமதி வளர்ந்து வருவதாகவும், இந்திய மருந்துகள் துறை, சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளது என்றும் அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close