ராமர் கோவிலை கட்டவில்லை எனில் மக்களின் நம்பிக்கையை பாஜக இழக்கும்: பாபா ராம்தேவ் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 09:08 am

people-will-lose-faith-in-bjp-if-ram-temple-is-not-built-baba-ramdev

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டா விட்டால், மக்களின் நம்பிக்கையை இழக்கும் சூழ்நிலை பா.ஜ.கவிற்கு வரும் என பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில் முதலாவது பதஞ்சலி அங்காடி நேற்று அகமதாபாத்தில் திறக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் தலைவரான பாபா ராம்தேவ், இதனை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், "அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாமாகவே கோவிலை கட்டி முடிப்பது. மற்றொன்று ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தில் இதற்கென தனி சட்டத்தை இயற்றி நிறைவேற்றி அரசு கோவிலை கட்டுவது. 

ஒருவேளை மக்களாகவே முடிவெடுத்து கோவிலை கட்டினால் அது நீதிமன்றம் மற்றும் சட்டத்தை அவமதிப்பதாக மாறிவிடும். மேலும்,  இந்த விவாகரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வருகிறது. நீதிமன்றமும் வழக்கை தாமதப்படுத்தி வருகிறது. 

இதனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க இழக்கும்" என்று எச்சரித்துள்ளார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.