மேகதாது அணை விவகாரம்: டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 01:29 pm
mekedatu-dam-issue-cauvery-management-board-meeting-today

மேகதாது பகுதியில் அணைக்கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடி விவாதிக்க உள்ளது. 

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

இதற்கு தமிழகத்தில் இருந்து கடுமையாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தவுள்ளன. 

மேலும், இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், காவிரியில் அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடி விவாதிக்க இருக்கிறது. காவிரியில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close