சபரிமலையில் அடிப்படை வசதிகள் குறித்து இன்று ஆய்வு!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 01:24 pm
kerala-high-court-appointed-monitoring-committee-to-visit-sabarimala-today

சபரிமலை பகுதியில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளின் நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு, அங்கு இன்று (திங்கள்கிழமை) ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

சபரிமலை பகுதிகளில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக  செய்து தரப்படவில்லை என புகார்கள் எழுந்தன.இதையடுத்து, இதுகுறித்து ஆராய்ந்து அறி்க்கை அளிக்க, நீதிபதி பி.ஆர்.ராமன் தலைமையில் மூன்று நபர்  கண்காணிப்புக் குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், அலுவாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நீதிபதி பி.ஆர்.ராமன் செய்தியாளர்களிடம் கூறியது: 

பம்பா, நிலக்கல் மற்றும் சன்னிதானம் பகுதிகளில் எங்கள் குழு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பக்தர்களுக்கான குடிநீர், உணவு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இப்பகுதிகளில் எவ்வாறு உள்ளன என்பதை ஆராய்வதே எங்களது கள ஆய்வின் முக்கிய நோக்கமாகும். அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லையென தெரிய வந்தால் அவற்றை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரையை எங்கள் குழு அளிக்கும் என அவர் தெரிவித்தார்.

ஆளுநருடன் சந்திப்பு: முன்னதாக திங்கள்கிழமை காலை, பாஜகவின் நான்கு நபர் குழு, கேரள ஆளுநர் பி.சதாசிவத்தை சந்தித்து, சபரிமலை விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அங்கு அமைதி திரும்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close