பொய் செய்திகள்: டிவி விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியது வாட்ஸ் -ஆப்

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 01:29 pm
whatsapp-launches-tv-campaign-in-india-to-fight-fake-news

வாட்ஸ்-ஆப்பில் பரப்பப்படும் பொய் செய்திகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அடுத்தகட்ட முயற்சியாக, தொலைக்காட்சி விழிப்புணர்வு பிரசாரத்தை அந்த நிறுவனம் டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியுள்ளது.

தகவல் பரிமாற்றத்தில் இன்று வாட்ஸ்-ஆப் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம் இதன் மூலம் பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பது இந்நிறுவனத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.

பொய் செய்திகள் குறித்து பயன்பாட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அகில இந்திய வானொலி சேவையின் வாயிலாக விழிப்புணர்வு விளம்பரங்கள் கடந்த ஆகஸ்ட் 29 - ஆம் தேதி முதல் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்தகட்டமாக, தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும், அகில இந்திய வானொலியில் கடந்த செப்டம்பர் 5 -ஆம் தேதி முதல் இந்த விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

தற்போது, பொய் செய்திகள் மற்றும் வதந்திகளின் ஆபத்தை பயனாளிகளுக்கு உணர வைக்கும் வகையில், தொலைக்காட்சிகளில் மொத்தம் 3 நிமிடங்கள் ஒளிபரப்பாகக்கூடிய தலா 60 விநாடிகள் கொண்ட 3 விழிப்புணர்வு பிரசார படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரசாரம்  டெல்லியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது என வாட்ஸ் -ஆப் நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close