யப்பா... 80 கோடி இந்தியர்களின் கையில் ஸ்மார்ட்போன்!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 02:54 pm
india-to-have-over-800-mn-smartphone-users-by-2022-cisco-study

வரும் 2022 -ஆம் ஆண்டில் 80 கோடி இந்தியர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களாக இருப்பார்கள் என சிஸ்கோ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு ( 2017) மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 40 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் இருமடங்காக உயரவுள்ளது. அதாவது வரும் 2022-இல் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 80 கோடியாக உயரும்.

அதேசமயம், ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப் போன்ற சமூகவலைதளங்களின் தாக்கம், மொபைல்போன் மூலமே மேற்கொள்ளப்படும் தொழில் சார்ந்த தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றால், ஸ்மார்ட்ஃபோன்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றம் ஐந்து மடங்கு அதிகரிக்கும். அதாவது, தற்போது மொத்தம் 2.4 ஜிகாபைட்டாக உள்ள மொபைல்ஃபோன் வாயிலாக தகவல் பரிமாற்றத்தின் அளவு 2022-இல் 14 ஜிகாபைட்டாக இருக்கும்.

மேலும் தற்போது, 18 சதவீதமாக உள்ள ஸ்மார்ட்ஃபோன்களின் மூலமான இணையதள தகவல் பரிமாற்றம் அடுத்த 5 ஆண்டுகளில் 44 சதவீதமாக அபார வளர்ச்சி பெறும் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. அத்துடன், தற்போது இந்தியாவில் 35 கோடியாக இருக்கும் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2022-இல் 84 கோடியாக உயரும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close