ஹைதராபாத் பாக்ய நகராக பெயர் மாற்றப்படும் -பாஜக

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 04:49 pm
bjp-welcome-yogi-s-proposal-to-rename-hydrabad

ஹைதராபாத் மாநகரின் பெயரை மாற்றுவது தொடர்பான உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை வரவேற்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,  உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், 'தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் நகரின் பெயரை பாக்ய நகர் என மாற்ற வேண்டும். தங்கள் மாநில தலைநகரின் பெயர் மாற வேண்டுமென தெலங்கானா மக்கள் விரும்பினால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்' என அவர் வலியுறுத்தி பேசினார்.
 யோகியின் இந்த கருத்தை பாஜக வரவேற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின்  தேசிய செய்தித் தொடர்பாளர் சிஎல்வி நரசிம்ம ராவ் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, 'ஹைதராபாத் நகரின் இயற்பெயர் பாக்ய நகர் என்பது இந்த மாநகரின் வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும். ஹைதராபாதின் பெயர் மாற்றம் குறித்த யோகி ஆதித்யநாத்தின் ஆலோசனை வரவேற்றத்தக்கது. இதுகுறித்து தக்க சமயத்தில் பாஜக உரிய நடவடிக்கை எடுக்கும்' என அவர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close