கடுப்பான விவசாயி; பிரதமருக்கு ரூ.1,064 மணி ஆர்டர்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Dec, 2018 08:09 pm
angry-over-earning-rs-1064-from-750-kg-onion-nashik-farmer-sends-money-to-pm-modi

750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் ஆயிரத்து 1064 ரூபாய் மட்டுமே கிடைத்ததால், ஆத்திரம் அடைந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அந்தப் பணத்தை பிரதமர் மோடிக்கு  ‘மணி ஆர்டர்’ மூலம் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாரஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே. விவசாயியான இவர் தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு வந்தார். சஞ்சய் விளைவித்த 750 கிலோ வெங்காயத்தை நிபாட் நகரில் உள்ள மொத்த விற்பனை சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவருடைய வெங்காயம் கிலோவுக்கு ஒரு ரூபாய் 40 காசுக்கு மட்டுமே விலைபோனது. இதனால் மனமுடைந்துபோன விவசாயி தன்னிடம் இருந்த மொத்த வெங்காயத்தை விற்று கிடைத்த பணம் ஆயிரத்து 64 ரூபாயை பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘மணி ஆர்டர்’ மூலம் அனுப்பி வைத்தார். தங்கள் வேதனைகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்ததாக அந்த விவசாயி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 4 மாத உழைப்பு வீணணதாகவும், விவசாயிகளின் நிலைமை இப்படியே சென்றுக்கொண்டிருந்தால் வாழ்வாதாரமே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைதான் ஏற்படும் என்றும் வேதனையுடன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close