என் இந்து மத அறிவு இப்போ ரொம்ப முக்கியமா?: மோடி அதிரடி

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 10:18 pm
modi-fires-back-at-rahul-for-knowledge-of-hindu-jab

தனக்கு இந்து மதத்தை பற்றி ஒன்றும் தெரியாது என ராகுல் காந்தி கூறியதற்கு பதிலடி கொடுக்குமாறு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்து மதத்தை பற்றிய முழு அறிவு முனிவர்களுக்கு கூட கிடையாது என கூறியுள்ளார். 

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி பேசினார். "இந்து மதத்தின் அர்த்தம் மிகவும் முக்கியமானது. இந்து மதத்தை பற்றி படித்து பாருங்கள். கீதை என்ன சொல்கிறது? அறிவு, நம் அனைவருக்கும் உள்ளே இருக்கிறது. நம்மை சுற்றி உள்ள அனைத்துமே அறிவு தான் என்கிறது. ஆனால், நானும் இந்து தான் என கூறும் பிரதமர் நரேந்தர மோடி, இந்து மதத்தின் அடிப்படை அர்த்தமே தெரியாமல் உள்ளார்" என ராகுல் பேசினார். 

ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இதற்கு பதிலடி கொடுத்து பேசிய மோடி, "இந்து மதத்தின் முழு அர்த்தம் பற்றி பெரிய பெரிய ஞானிகளுக்கும், முனிவர்களுக்குமே முழுவதும் தெரியாது. இப்போது தேர்தலின்போது, மோடிக்கு இந்து மதம் பற்றி என்ன தெரியும் என கேட்கிறார்கள். எனது இந்து மத அறிவை பார்த்தா ராஜஸ்தான் வாக்களிக்க போகிறது? தண்ணீர், மின்சாரம், சாலைகள் என அடிப்படை தேவைகளுக்காக ஒட்டு போடுவார்களா அல்லது, எனது இந்து அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு முக்கியமா" என கேள்வி எழுப்பினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close