உ.பி: மாட்டிறைச்சியால் கலவரம்; போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 11:01 pm
up-cow-vigilantes-riot-policeman-among-2-dead

உத்தர பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் பகுதியில், மாட்டிறைச்சிக்காக பசு கொலை செய்யப்பட்டதாக கூறி, பசு பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய கலவரத்தில், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், போராட்டக்காரர் ஒருவரும் பலியாகினர்.

 புலந்த்சாகர் நகரில், இறைச்சிக்காக பசு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய அப்பகுதியை சேர்ந்த சிலர், பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்களுடன் இணைந்து சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். அந்த சமயம், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், உயிரிழந்தார். போராட்டக்கார்கள் பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். பொதுமக்கள் பலரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.

கலவரம் பெரிதானதை தொடர்ந்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சுமித் குமார் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

'தப்லிகி இஜ்தேமா' என்ற இஸ்லாமிய கொண்டாட்டத்திற்காக, நாட்டின் பல இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புலந்த்சாகர் நகரில் குவிந்திருந்தனர். 3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நேற்று முடிவடைந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால், அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரம் குறித்து விசாரிக்க, சிறப்பு கமிட்டி ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close