காங்கிரஸ் கட்சிக்கு தெலைநோக்கு பார்வை இல்லை: பிரதமர் மோடி

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 06:03 pm
pm-narendra-modi-attacks-congress

காங்கிரஸ் கட்சிக்கு அன்றிலிருந்து இன்றுவரை தொலைநோக்கு பார்வை கிடையாது எனவும், நாட்டில் காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை சரிசெய்வதே என்னுடைய வேலையாக இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹனுமன்கரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லாததாலேயே சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டுதலமான கரட்டர்புர் குருத்துவாரா பாகிஸ்தான் வசம் சென்று விட்டது. 

16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கராத்பூர் குருத்துவரா இந்திய எல்லையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தானில் பாயும் ரவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் அந்த குருத்துவாராவிற்கு செல்வதற்கு வசதியாக கடந்த 27 ஆம் தேதி சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போதுதான் சீக்கியர்கள் கராத்பூர் சென்று வருவதற்காக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஏன் 70 ஆண்டு காலமாக காங்கிரஸ் இதனை செய்யவில்லை. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது சீக்கியர்களின் உணர்வுகளுக்கு காங்கிரஸ் கட்சி மதிப்பளிக்கவில்லை. குருநானக்கின் முக்கியத்துவம் குறித்து காங்கிரசுக்கு எந்த புரிதலும் இல்லை. நாட்டில் காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை சரிசெய்வதே என்னுடைய வேலையாகவுள்ளது” என்று சாடினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close