'சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய முறையில் மாற்றம் இல்லை'

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 08:17 am
no-proposal-to-alter-the-dbt-mechanism-for-subsidy-transfer-to-domestic-lpg-consumers

எல்.பி.ஜி எனப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானிய முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியான சில செய்திகளுக்கு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

தற்போது செயல்பாட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானியத்தை செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை மாற்றி, ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த முறைப்படி, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் திட்டத்தை அரசு பின்பற்ற இருப்பதாக அந்த ஊடகங்களில் செய்திகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் இது குறித்த செய்திகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், நேரடி மானியத் தொகை பரிமாற்ற முறையை மாற்றும் உத்தேசம் ஏதும் பெட்ரோலிய அமைச்சகத்திடம் இல்லை என்றும் தற்போது வழங்கப்படுவது போலவே வங்கி கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படும் என்று பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close