அதிக எடைக்கொண்ட ஜிசாட் செயற்கைகோள்: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 08:17 am
gsat-11-was-launched-successfully-from-kourou-launch-zone-today

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ஜிசாட்-11 செயற்கைக்கோளை பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இது அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோளாகும்.

இந்திய இணையதள சேவையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில்  40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்டு ஜிசாட்-11 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஜிசாட் -11 செயற்கைக்கோள்மூலம் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கும் இணைய சேவை விரைவாகவும் எளிமையாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிக எடை அதாவது 5854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்தியாவிலிருந்து அனுப்ப இயலாது என்பதால் தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜிசாட்-11   கடந்த மே மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால்  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டதால்   ஜிசாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது.

அதன் படி இன்று பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து அதிகாலை 3.23 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close