நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 03:07 pm
coal-scam-case-former-bureaucrat-hc-gupta-sentenced-to-3-years-in-jail

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனத்தின் ரூ.117 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு அளித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்கள் குறித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை வழங்க வேண்டும் என சிபிஐ வாதம் செய்த நிலையில், முன்னாள் செயலர் குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மேலும் இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close