இந்தியாவின் வயதான யூடியூப் கலைஞர் மஸ்தனம்மா காலமானார்

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 03:53 pm
106-years-old-youtube-cookery-queen-mastanamma-is-no-more

106 வயதான சமையல் கில்லாடி மஸ்தனம்மா வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் தான் இந்தியாவின் மிகவும் வயதான யூடியூப் கலைஞராவார். 

ஆந்திராவை சேர்ந்த மஸ்தனம்மாவின் யூடியூப் சேனல் 'கன்ட்ரி ஃபுட்ஸ்' (Country foods). இந்த சேனலை 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

கடந்த 6 மாதமாக இந்த சேனலில் எந்த வீடியோவும் அப்லோட் செய்யப்படவில்லை. எனவே அது குறித்து பலர் கேள்வி எழுப்பினர்.  இதனையடுத்து அந்த சேனலை நிர்வகித்து வரும் லக்‌ஷ்மன் மற்றும் ஶ்ரீநாத் ரெட்டி ஆகியோர் மஸ்தனம்மா இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். 

இதுகுறித்து ஒரு வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். லக்‌ஷ்மன், மஸ்தனம்மாவின் பேரன் ஆவார். இவர் தான் 2016ம் ஆண்டு  மஸ்தனம்மா கத்திரிக்காய் செய்வதை வீடியோ எடுத்து அதனை யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் இதே போன்ற அடிக்கடி வீடியோக்களை பதிவிட தொடங்கினார். மஸ்தனம்மா செய்ததில் பல மிகவும் பிரத்யேகமான உணவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close