மேகதாது விவகாரம்: கர்நாடகாவின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 05:18 pm
tn-govt-filed-case-against-karnataka-govt

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளது. மேலும் கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை வாரிய தலைவர் மசூத் உசேன் உள்ளிட்டோர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் அளித்தது. அதற்கு மத்திய அரசின் நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து கர்நாடக அமைச்சர் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (7-ந்தேதி) மேகதாது அணை குறித்து ஆய்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. மத்திய அரசு அரசியல் காரணத்திற்காக கர்நாடகத்தில் மேகதாது அணை விவகாரத்தில் நேரடியாகவே ஆதரவு அளித்து வருவதாக விவசாயிகளும், அரசியல் தலைவர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவக்குமார் மீதும், காவிரி மேலாண்மை வாரிய தலைவர் மசூத் ஹூசேனிற்கு எதிராகவும் அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதற்கட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்ததற்காக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close