எய்ட்ஸ் பாதித்த பெண் ஏரியில் விழுந்ததால் ஏரி நீர் வெளியேற்றம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 06:24 pm
fear-of-hiv-drives-villagers-to-empty-only-water-source

கர்நாடகாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்த ஏரியிலுள்ள நீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டுவருகிறது. 

நாவல்குண்டம் தாலுக்காவில் ஹெச்.ஐ.வி நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ம் தேதி மொரப் என்ற ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஏரி நீர் மாசடைந்துவிட்டதாகவும், அந்த நீரை பயன்படுத்தினால் கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் ஹெச்.ஐ.வி தொற்று பரவிவிடும் என ஊருக்குள் தகவல் பரவ, குடிநீருக்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் பிரதானமாக உள்ள ஏரி நீரைப் பயன்படுத்த ஊர் மக்கள் மறுத்து விட்டனர்.

பொதுவாக ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததும், நோய்கிருமியும் இறந்துவிடும் அப்படியே உடலில் இருந்து வெளியேறினாலும் நீரிலோ காற்றிலோ கலந்து 2 நொடிகள் கூட உயிரோடு இருக்காது எனவும் மருத்துவர்கள் கிராமத்தினருக்கு அறிவுறுத்தினர். ஆனால் இதை ஏற்க மறுத்த கிராமத்தினர், அந்த ஏரியில் உள்ள நீரை பயன்படுத்தாது 3 கிலோமீட்டர் தூரம் சென்று நீரை எடுத்து பயன்படுத்துகின்றனர். அதிகாரிகள் ஏரி நீரைப் பருகத்தயாரா? எனக் கேட்கும் கிராம மக்கள், தூய நீர் நிரப்பினால் மட்டுமே பயன்படுத்துவோம் என திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். இதையடுத்து, 36 ஏக்கர் பரப்புள்ள ஏரியிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close