ராகுலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பெயர்கள் கூட தெரியாது- மோடி தாக்கு 

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 07:04 pm
you-don-t-even-know-names-of-congress-leaders-pm-modi-mocks-rahul-gandhi-over-kumbhkaran-yojana-gaffe

புகழ்பெற்ற விவசாயி கும்பராமின் பெயரைக் கும்பகர்ணன் என ராகுல்காந்தி கூறினார். இதை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தன் கட்சியில் உள்ள தலைவர்களின் பெயர்களே தெரியாது என பிரதமர் மோடி சாடினார். 

ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளியன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சுமேர்ப்பூர் என்னுமிடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டியன் மிக்கேல் அதில் யார் யாருக்குப் பங்குள்ளது என்கிற உண்மையைச் விரைவில் சொல்லிவிடுவார். ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரின் வருமான வரிக் கணக்கை மறுமதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைச் சுட்டிக்காட்டி, அதிலிருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். கடந்த எழுபது ஆண்டுகளில் மக்களின் நன்மைக்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதை முதலில் கூறட்டும் என்றும், அதன்பின் நாலரை ஆண்டுகளில் பாஜக என்ன செய்தது என்பது பற்றி நான் கூறுகிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தன் கட்சியில் உள்ள தலைவர்களின் பெயர்களே தெரியாது” என்று கூறினார்.

முன்னதாக புகழ்பெற்ற விவசாயி கும்பராமின் பெயரைக் கும்பகர்ணன் என ராகுல்காந்தி கூறியதையடுத்து மோடி இத்தகைய கருத்தினை தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close