பார்ட் டைமாக பிரதமர் வேலை செய்யும் மோடி: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 09:00 am
hope-you-can-spare-some-time-for-your-part-time-job-as-pm-rahul-tweet

5 மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்துவிட்டன இனிமேலாவது நீங்கள் பார்ட் டைமாக மாறும் பிரதமர் வேலையை பாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித்தலைவர்  ராகுல் காந்தி ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் பிரச்சாரம் நேற்றோடு நிறைவடைந்தன. டிசம்பர் 11ம் தேதி இந்த தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியாகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், “அன்புள்ள மோடி அவர்களே... இப்போது பிரச்சாரம் முடிந்துவிட்டது. இனிமேலேனும் நீங்கள் பார்ட் டைமாக பார்க்கும் பிரதமர் வேலைக்கு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் பிரதமராகி 1654 நாட்கள் ஆகிவிட்டன.

 

 

ஆனால், இன்னும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்காமல் இருக்கிறீர்கள். அதை, ஒருநாள் முயற்சி செய்யுங்கள். கேள்விகளை எதிர்கொள்வது கொண்டாட்டமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close