கெடுபிடி காட்டிய சிபிஐ - வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கிய கிறிஸ்டியன் மைக்கேல்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 11:31 am
cbi-enquiry-with-christian-michael-on-augusta-westland-scam

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கு தொடர்பாக துபாயில் இருந்து நாடு கடத்திக் கொண்டு வரப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவுப் பொழுதிலும் சிபிஐ அவரிடம் விசாரணை மேற்கொண்டதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இந்திய அரசுப் பதவிகளில் உள்ள விவிஐபிக்கள் பயணிப்பதற்காக, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.450 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியேன் மைக்கேலை சிபிஐ தேடி வந்தது. அவர் துபாயில் தங்கியிருந்தார். அந்நாட்டு அரசு உதவியுடன் மைக்கேலை சிபிஐ அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வந்தனர்.

டெல்லி விமான நிலையத்துக்கு மைக்கேல் அழைத்து வரப்பட்டபோது நேரம் இரவு 10.30 ஆகும். அதன் பின்னர் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு நள்ளிரவு 1.20 மணியளவில் அவர் கொண்டு செல்லப்பட்டார்.அப்போது உடல் சோர்வுடன் காணப்பட்டதால் சிபிஐ அதிகாரிகள், மருத்துவரை வரவழைத்து மைக்கேலை பரிசோதித்தனர். பின்னர், சிபிஐ அதிகாரிகள் மைக்கேலிடம் விசாரணை நடத்தியதாகவும், அதிகாலை 4 முதல் 6 மணி வரை மட்டுமே மைக்கேல் தூங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மைக்கேலை சிபிஐ  நேற்று ஆஜர்படுத்தியது. இதில், அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close