உத்தர பிரதேச பா.ஜ.க எம்.பி கட்சியில் இருந்து விலகல்!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 03:02 pm
savitribai-phule-bjp-mp-from-bahraich-uttar-pradesh-resigns-from-the-party

உத்தரபிரதேச மாநிலம் 'பஹ்ரைச்' தொகுதி பா.ஜ.க எம்.பி சாவித்ரிபாய் பூலே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் பா.ஜ.க இந்த சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2012ம் ஆண்டு உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு தேர்தெடுக்கப்பட்ட இவர், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். தற்போது 2019 நாடாளுமன்றத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் பா.ஜ.க மக்களவை எம்.பி ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளது பா.ஜ.கவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close