மேகதாதுவில் அணைக்கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை: சித்தராமையா

  Newstm News Desk   | Last Modified : 07 Dec, 2018 08:47 am

no-need-to-get-tamil-nadu-s-approval-for-makedatu-dam-siddaramaiah

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைக் கட்ட தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று  அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் நேற்று மேகதாது திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசும் போது, "மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் முந்தைய காங்கிரஸ் அரசின் மிக முக்கியமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் அரசியல் நோக்கத்திற்காக தமிழக அரசு பிரச்னை செய்கிறது.

கர்நாடகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளும் கர்நாடகத்திற்கு சாதகமாக உள்ளன. அணை கட்டக்கூடாது என்று எந்த தீர்ப்பிலும் சொல்லப்படவில்லை.

மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை. எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திடம் எந்த ஆதாரங்களும் இல்லை. கர்நாடகத்தின் திட்டம் நியாயமானது. அதனால் கர்நாடக வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றத்திற்கு தேவையான விவரங்களை வழங்க வேண்டும்.

ஒருவேளை இதற்கு இடைக்கால தடை விதித்தால், திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பிரச்னையை அந்த மாநில அரசு தீவிரமாக கையில் எடுத்துள்ளது" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close