வாக்காளர் பட்டியலில் இருந்து பிரபல வீராங்கனையின் பெயர் மாயம்!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 01:42 pm
telangana-jwala-gutta-says-her-name-is-missing-from-voters-list

வாக்காளர் பட்டியலில் இருந்து தமது பெயர் மாயமானது குறித்து பிரபல  இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், வார்தா பகுதியைச் சேர்ந்தவர் பிரபல இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா. தெலங்கானா சட்டப்பேரவைக்கு இன்று( வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெறுவதையடுத்து, வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள அதனை ஆன்-லைனில் சரிபார்த்துள்ளார். அப்போது பட்டியலில் இருந்து தமது பெயர் மாயமாகியுள்ளதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக அவர், தமது ட்விட்டர் பக்கத்தில் #Whereismyvote என்ற ஹேஷ்டேகுடன் வெளியிட்டுள்ள பதிவில் ," வாக்காளர் பட்டியலிலிருந்து என் பெயர்  திடீரென மாயமாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த லட்சணத்தில்தான் தேர்தல் நடைபெறுகிறது" என பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close