காங்கிரஸ் ஆட்சியில் தேசத்தின் வளர்ச்சி முடக்கம்: மோடி

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 03:29 pm
india-s-growth-was-muted-by-congress-government-modi

முந்தைய ஆட்சியாளர்கள்  நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல், வாக்கு வங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தியதன் விளைவாக, தேசத்தின்  வளர்ச்சி  முடங்கி போயிருந்தது என பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸை மறைமுகமாக சாடினார்.

"தைனிக் ஜாக்ரன்" ஹிந்தி நாளிதழின் 75 -ஆவது ஆண்டு விழா டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

அளப்பரிய மனித வளம் மற்றும் இயற்கை வளங்களை கொண்டிருந்தும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் தேசம் வளர்ச்சியில் பின்தங்கியே இருந்தது. இதனைக் கண்டபோது, சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பின்பும் , நாடு ஏன் இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளதென்ற பொதுவான கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்து கொண்டே இருந்தது.

இதற்கு, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல், வாக்கு வங்கி அரசியலில் கவனம் செலுத்தியதுதான் காரணம். ஆனால், 2014 -இல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், அனைத்துத் துறைகளிலும் நாடு வளர்ச்சி கண்டு, உலக அரங்கில் இந்தியா வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது மத்தியில் நடைபெற்றுவரும் பாஜக ஆட்சியில்தான் மிசோரம், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்கள் ரயில் போக்குவரத்து வசதியை பெற்றுள்ளன. முந்தைய ஆட்சியில் இதனை அம்மாநில மக்கள் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது.

மத்திய அரசின் "தூய்மை இந்தியா",  "பெண் குழந்தைகள் கல்வி" போன்ற திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. ஆட்சி. அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்பது மட்டும் ஊடகங்களின் கடமை அல்ல என்று மோடி பேசினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close