பாஜகவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும் மூத்த வழக்குரைஞர்!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 04:21 pm
ram-jethmalani-bjp-jointly-move-application-to-end-suit

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தம்மை நீ்க்கியதை கண்டித்து, பாஜகவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்ப பெற விரும்புவதாக மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவுக்கு பாஜகவும் சம்மதம் தெரிவித்துள்ளது.

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், ராம் ஜெத்மலானி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக, 2013 மே மாதம் பாஜக கட்சி நிர்வாகம் அறிவித்தது.

கட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ராம் ஜெத்மலானி, டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை திரும்ப பெற விரும்புவதாக அவர் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு பாஜகவும் சம்மதம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close