மேடையில் மயங்கி விழுந்த நிதின்கட்கரி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 06:54 pm
nitin-gadkari-faints-on-stage-at-university-convocation-in-maharashtra

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பட்டமளிப்பு விழாவின் இறுதியில், எழுந்து நின்ற கட்கரி மயக்கம் வரவுள்ளதாக கூறவே அவருக்கு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தண்ணீர் கொடுத்துள்ளார். இதையடுத்து விழாவில் தேசியகீதம் பாடவே கட்கரி எழுந்து நின்றுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கினார். இதையடுத்து அருகிலிருந்த உதவியாளர்கள் அவரை நாற்காலியில் அமரவைத்தனர். இதனால் நிகழ்ச்சியில் பரப்பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிதின் கட்கரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த்னர். 

இதுகுறித்து நிதின்கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் “விழாவில் கலந்து கொண்டபோது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விட்டது. இதனால் மயக்கம் ஏற்பட்டது. தற்போது நான் நலமுடன் உள்ளேன். எனது உடல்நலம் குறித்து விசாரித்த நலம் விரும்பிகளுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close