புலந்த்சாகர் மாட்டிறைச்சி வன்முறை திட்டமிடப்பட்ட செயல்: பகீர் தகவல்

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 06:11 pm
bulandshahr-riots-was-planned-by-mob

உ.பி-யின் புலந்த்சாகர் பகுதியில், பசு கொல்லப்பட்டதாக எழுந்த கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், இஸ்லாமியர்களை தாக்குவதற்காக திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புலந்த்சாகர் பகுதியில் இரு தினங்களுக்கு முன் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சிலர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாற, அதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களை தாக்குவதற்காகவே பசு கொலை செய்யப்பட்டதாக போலியான வதந்தி பரப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

3 நாட்கள் நடைபெறும் இஸ்லாமிய நிகழ்ச்சிக்காக, இந்த மாத துவக்கத்தில், லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகர் பகுதியில் குவிந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அடுத்த நாள், மாட்டிறைச்சிக்காக பசுவை கொலை செய்ததாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. கொல்லப்பட்டதாக கோரப்பட்ட பசுவின் உடலுடன் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுப்பட்டனர். அப்போது, திடீரென கலவரம் வெடித்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், இந்த கலவரத்தில் கொல்லப்பட்டார். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உ.பி கூடுதல் உளவுத்துறை இயக்குனர் நடத்திய விசாரணையில், மாட்டிறைச்சிக்காக கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பசு, சம்பவத்தின் இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அந்த பசுவின் உடலை பயன்படுத்தி, ஊரைவிட்டு விழாவிற்கு சென்ற இஸ்லாமியர்கள் திரும்ப வரும் நேரம் பார்த்து, சாலையை மறித்து கலவரத்தில் ஈடுபட அப்பகுதியை சேர்ந்த சிலர் முயற்சி செய்து, இந்த கலவரத்திற்கு திட்டமிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. உ.பி காவல்துறை டிஜிபி-யிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்குவுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close