நிரவ் மோடிக்கு சொந்தமான பங்களாவை இடிக்க மகாராஷ்டிர அரசு முடிவு

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 06:58 pm
illegal-portions-of-nirav-modi-bungalow-to-be-demolished-soon

அலிபாக் கடற்கரையோரத்தில் விதிமீறிக் கட்டப்பட்டுள்ள நீரவ் மோடியின் வீடு உட்பட 58கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான பங்களா ஒன்று அலிபாக் கடற்கரையோரத்தில் இருந்தது. இந்த பங்களா கடற்கரை மண்டல விதிகளை மீறி, சட்ட விரோதமாக கட்டப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு அமர்வு, நிரவ் மோடியின் சட்டவிரோத பங்களா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து வைர வணிகர் நீரவ் மோடி 376 சதுர மீட்டர் பரப்புக்குக் கட்டட அனுமதி வாங்கிவிட்டு ஆயிரத்து 1071சதுர மீட்டர் பரப்பில் கட்டடம் கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது போல பலரும் விதிகளை மீறிக் கடற்கரையில் கட்டடம் கட்டியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மாநில அரசு, நீரவ் மோடி வீடு உள்ளிட்ட 58 கட்டடங்களை இடிக்க ராய்காட் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தது. அதன்படி நிரவ் மோடிக்கு சொந்தமான பங்களா கடந்த 5-ந்தேதி இடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டு உள்ளது.

Newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close