ராபர்ட் வத்ராவுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ரெய்டு!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 08:05 pm

robert-vadra-s-aides-places-raided-by-ed

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் தொழிலதிபர் ராபர்ட் வத்ராவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது. 

சோனியா காந்தியின் மருமகனும், ப்ரியங்கா காந்தியின் கணவருமான தொழிலதிபர் ராபர்ட் வத்ராவின் மீது ஏற்கனவே பல்வேறு நில மோசடி புகார்கள் சுமத்தப்பட்டு 50 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வத்ராவின் நிறுவனம் பல்வேறு பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தங்களில் வத்ராவின் நிறுவனம் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 

இந்த விசாரணை தொடர்பாக, புதுடெல்லி மற்றும் பெங்களூரில் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. 5 மாநிலங்களில் தோற்கவுள்ள நிலையில், அதை மறைக்க பாரதிய ஜனதா அரசு இவ்வாறு செய்வதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 

தன் மீது மத்திய அரசு தொடர்ந்து போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வத்ரா தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close