போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 08:52 am

decided-to-bring-the-revision-in-the-pocso-act

குழந்தைகளுக்கு ஹார்மோன் ஊசிகளை போட்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 

பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு வந்ததையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் எனப்படும், போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி  12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  ஹார்மோன் ஊசிகளை பயன்படுத்தி பாலியல் முதிர்ச்சியை ஏற்படுத்தி, பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றனர். இது போன்று ஹார்மோன் ஊசிகளை போடுவோருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கும் வகையில், போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில், குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுவோருக்கும் தண்டனை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. 

இதற்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான மேனகா, அனுமதி அளித்ததையடுத்து, இது தொடர்பான பரிந்துரை, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close