அதிகளவில் விளம்பரப்படுத்தி அரசியலாக்கப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: முன்னாள் ராணுவ ஜெனரல் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 12:46 pm

too-much-hype-over-surgical-strike-ex-army-officer-who-saw-ops-live

சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிக அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அரசியலாக்கப்பட்டு விட்டது என ஓய்வுபெற்ற இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ் ஹூடா தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடைபெற்ற ராணுவ இலக்கிய விழாவில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்த  ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ஓய்வுபெற்ற இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ் ஹூடா, "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் விவகாரம் அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அரசியலாக்கப்பட்டு விட்டது" என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் மிக முக்கியமானது. இதை நடத்த ராணுவம் அவ்வளவு சிரமப்பட்டுள்ளது. ஆனால் அது தற்போது எந்த அளவிற்கு அரசியலாக்கப்பட்டுள்ளது என புரிகிறது.

எந்த ஒரு விஷயத்தையும் சரியா? அல்லது தவறா? என அரசியல்வாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். சந்தேகங்கள் இருக்கலாம். அது இயற்கை தான். ஆனால் தொடர்ந்து ராணுவ தாக்குதல்கள் மற்றும் ராணுவத்தினரின் செயல்பாடுகள் குறித்து அதிகப்படியாக சந்தேகங்களை எழுப்புவது தேவையில்லாத ஒன்று என நான் கருதுகிறேன் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரகசியமாக வைக்கப்பட்டதாலேயே நாங்கள் நினைத்ததை விட அது சிறப்பாக முடிந்தது. 

இது நமது இந்திய ராணுவத்தின் முக்கிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இதனை வரலாறு பேசும். நமது வரலாறு குறித்தும், ராணுவ செயல்பாடுகள் குறித்தும் அடுத்த தலைமுறையினர் அறிய வேண்டும். ராணுவத்தினர் பொதுவாக அளவாகவே பேசுவார்கள். ஆனால் இது போன்ற விழாக்களால் பொதுமக்கள், ராணுவத்தினரிடம் கலந்துரையாடுவதால் அவர்கள் பார்வை எப்படி இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும். ராணுவத்தினரை மக்கள் புரிந்து கொள்ள இது போன்ற விழாக்கள் அவசியம்" என்று பேசினார். 

2016 செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதமாக  ராணுவத்தினர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினர். அப்போது வடக்கு ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் ஹூடா என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.