ம.பி. தேர்தலில் இந்த 16 தொகுதிகள் தான் வெற்றியை தீர்மானிக்குமாம்!

  முத்துமாரி   | Last Modified : 08 Dec, 2018 03:12 pm
special-16-in-madhya-pradesh-to-indicate-which-party-to-form-the-government

மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், 16 முக்கிய தொகுதிகளின் வெற்றி தோல்வியே, யாருக்கு ஆட்சி என்பதை நிர்ணயிக்கும் என ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. 

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம்,ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தலானது முடிவடைந்துள்ளது. வருகிற 11ம் தேதி இந்த 5 மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேச மாநில தேர்தலானது, மிக முக்கிய தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தரப்பினருக்குமே சம பலம் உள்ளது என பேசப்படுகிறது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் வெளியாகும் நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 16 தொகுதிகளை கைப்பற்றுபவர்களுக்கு தான் ஆட்சி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மால்வா, சஸ்நர், ஜாவத், பத்நகர், மனவார், கர்கான், செந்துவா, கிழக்கு குவாலியர், சன்சார், நாரியாவாலி, கோசங்காபாத், கோடா, டோக்ரி, பைத்துல், நேபாநகர், பைஜாவார், பத்வாரா, நிவாஸ் ஆகிய 16 தொகுதிகளிலும் அல்லது அவற்றில் அதிகமான தொகுதிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் ஆட்சியை பிடிப்பார்களாம். 

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் இதுபோன்று நிகழ்ந்துள்ளது. இதில் மன்வார், சன்சார், நாரியாவாலி ஆகிய முக்கிய தொகுதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் கட்சியின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த தேர்தலிலும் இந்த பார்முலா, ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close