அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள ஹிலாரி கிளிண்டன்

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 06:17 pm
isha-ambani-begins-pre-wedding-celebrations-with

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானி திருமணத்தையொட்டி 5,100 பேருக்கு அன்னாதானம் வழங்குகிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இஷா அம்பானி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 

இந்தியாவின் முதல் பணக்காரரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் உதய்பூரில் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் உதய்பூருக்கு படையெடுத்துள்ளன. 

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான், வித்யா பாலன்,கேத்ரீனா, பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் என பாலிவுட் திரையுலக பட்டாளமே வருகிறது. மேலும், அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டனும் வருகை தந்துள்ளார்.

இஷா அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 5,100 பேருக்கு மூன்று வேளை விருந்து அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இஷா அம்பானி உணவு பரிமாறி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close