சுட்டு வீழ்த்தப்பட்ட 230 பயங்கரவாதிகள்!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 06:34 pm

230-terrorist-s-killed-in-jammu-kashmir

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நிகழாண்டில் இதுவரை 230-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீரில் நிகழாண்டில்  ஜூன் 25 முதல் செப்டம்பர் 14 வரையிலான காலகட்டத்தில் 51 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர்  சுட்டுக் கொன்றுள்ளனர். இதேபோன்று, செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் 85 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

மொத்தமாக நிகழாண்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 232 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும்,  மேலும் 240 பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளதாக்கில் பதுங்கியிருக்கக் கூடும் என்றும் பாதுகாப்புத் துறை  வட்டாரங்கள் தெரிவித்தன.
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.