அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் - வெங்கய்யா நாயுடு

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 10:13 am
cases-against-politicians-should-be-fast-tracked-vice-president

அரசியல் தலைவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் ஏராளமாக நிலுவையில் இருப்பது குறித்து குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு கவலை தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பேச்சுக்கள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்றிரவு நடைபெற்றது. அதில், வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:

அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுகின்றன என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஏறத்தாழ 4,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

நமது அரசியல் கட்டமைப்பு இன்றைக்கு இருப்பதைவிட இன்னும் சிறப்படைய வேண்டுமெனில், தவறுகளை களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நமது ஜனநாயகத்தை பலப்படுத்த அதுவே உதவும். 

நல்ல குணம், தரம், நன்னடத்தை, திறன் உள்ளிட்டவை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொது நல்லெண்ணத்தின் தரம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. இதை இப்படியே நீடிக்க அனுமதிக்கக் கூடாது. நாமெல்லாம் பொதுவாழ்க்கையில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். நாம் எதிராளிகள் மட்டுமே; விரோதிகள் அல்ல.

சட்ட அவைகளுக்கு உள்ளேயும், வெளியேவும், தங்கள் கட்சியினர் நன்னடத்தைகளை கடைப்பிடிப்பதை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில், அரசியல் அமைப்புகள் மீதான நம்பிக்கையை மக்கள் வெகுவிரைவில் இழந்துவிடுவார்கள் என்றார் அவர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close