சசிகலாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 12:16 pm
special-court-issued-warrent-to-sasikala-in-fera-case

அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்காக ஆஜராகாததையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு  சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு  பிறப்பித்துள்ளது.

கடந்த 1996-இல், தனியார்  தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப உபகரணங்களை வாங்கியபோது, சட்டவிரோதமான வழிகளில் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர்  வி.பாஸ்கரன்  மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த  30-ஆம் தேதி (நவம்பர் 30) சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகாததையடுத்து, அவரை வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 13) ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம்  பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலவில்லை என்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close