அமெரிக்காவில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மரியாதை! (புகைப்படங்கள்)

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 06:43 pm
defence-minister-nirmala-sitaraman-s-visit-to-us

5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் கலந்து கொண்டார். 

முதல் நாளில், பல்வேறு போர்களில் பலியான அமெரிக்க ராணுவ வீரர்களின் நினைவு இடமான ஆர்லிங்டன் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் சமீபத்தில் காலமானார். அவரது கல்லறைக்கு சென்று, மரியாதை செலுத்தினார். 

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமை இடமான பென்டகனுக்கு சென்ற நிர்மலா சீதாராமனை, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் வரவேற்றார். அங்கு இரு நாட்டு பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 

தலைநகர் வாஷிங்டனில் உள்ள பிரீர்- சாக்லர் ஆசிய கலை கண்காட்சியகத்திற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமனை, மேட்டிஸ் அழைத்துச் சென்றார். 

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி கழகத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இறுதியாக அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள அமெரிக்க இந்திய பசிபிக் பாதுகாப்பு தளத்திற்கு சென்று பார்வையிட்டார். பசிபிக் கமேண்ட் (PACOM) என அழைக்கப்பட்ட இந்த தளத்தை, கடந்த மே மாதத்தில் அமெரிக்க இந்திய பசிபிக் கமேண்ட் (USINDOPACOM) என அமெரிக்க அரசு பெயர்மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஹவாய் மாகாண நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து மதத்தை சேர்ந்த முதல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருமான துள்சி கப்பார்டை சீதாராமன் சந்தித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close