இனிமே டிவியிலும் விஜய் சேதுபதி தான்: நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிறார்!

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 08:36 am
vijay-sethupathi-to-host-tv-show-in-sun-tv

திரைப்படங்களில் கலக்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தொலைக்காட்சியின் மூலமும் மக்களை சந்திக்க உள்ளார். அவர் சன்டிவியில் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோ தற்போது வைரலாகி வருகின்றன.

கமல் ஹாஸன், விஷால், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த வரிசையில் விஜய் சேதுபதியும் சேர்ந்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அது எந்த வகையான நிகழ்ச்சி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் புதிய அவதாரம் எடுத்துள்ளது குறித்து ட்விட்டரில் அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

 

 

அந்த வீடியோவில் முதன் முறையாக வினா நான், விடை அவர்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close