மத்தியப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள்: பலத்த போட்டிக்கு இடையே காங்கிரஸ் முன்னிலை!

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 01:13 pm
madhya-pradesh-assembly-election-results-congress-leads

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  தற்போது பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது, 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்திற்கான தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநிலங்களில் அதிக தொகுதியை கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும். 

முன்னதாக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003ம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை. கடந்த 15 வருடங்களாக பாஜக தான் ஆட்சி செய்து வருகிறது. இதனால் பாஜக ஆட்சியை இந்த தேர்தலில் அகற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 107, பாஜக 99 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி 8 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் சிறிதளவு வித்தியாசத்திலே இருப்பதால் இரு கட்சிகளுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close