ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 08:08 pm
shaktikanta-das-appointed-as-rbi-governor

ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸை புதிய ஆளுநராக நியமித்துள்ளது மத்திய அரசு. 

தமிழக அரசில் பல்வேறு துறைகளில் முக்கிய பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், கடந்த 2014ம் ஆண்டு, மத்திய வருவாய்த்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

2015ல் இருந்து இரண்டு ஆண்டுகள், பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளராக பணியாற்றினார். ஓய்வுபெற்ற பிறகு, 15வது நிதிக்குழுவின் உறுப்பினராக செயல்பட்டு வந்தார். தற்போது அவரை, இந்திய ரிசர்வ் வங்கியின்  25வது ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close