துவங்கியது மோடி அரசின் வீழ்ச்சி: கெஜ்ரிவால்

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 08:34 pm
end-for-modi-government-begins-kejriwal

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களில் ஆட்சியை பாரதிய ஜனதா இழந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான 'கவுன்ட்டவுன்' இது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாரதிய ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி மாநில முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான 'கவுன்ட்டவுன்' இது எனத் தெரிவித்துள்ளார்.

"பிரதமர் மோடி அரசாங்கத்தின் முடிவுக்கான துவக்கம் தான் இந்த தேர்தல் முடிவுகள்" என பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close