மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 10:13 pm
we-accept-peoples-mandate-prime-minister-modi

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களில் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி இழந்துள்ள நிலையில், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சட்டிஸ்கர் மாநிலத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர், "மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம். சட்டிஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நாங்கள் ஆட்சி புரிய வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. இந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா அரசுகள், ஓயாமல் மக்கள் நலனுக்காக உழைத்து வந்தன" என எழுதினார்.

மேலும், தேர்தலில் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close