வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தாலும் விவரங்களை வெளியிடக்கூடாது: உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 06:02 am
rape-victim-s-true-identity-should-not-be-exposed-supreme-court

பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அவர்கள் இறந்தாலும் வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றம் ஊடகங்களுக்கும் காவல்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை, அவர்களது உண்மையான அடையாளத்தை சமூக வலைத்தளங்களில் பகிரவோ, பொது இடங்களில், பேரணிகள், போராட்டங்கள் நடத்த பயன்படுத்தவோ கூடாது, என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகளும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான விவரங்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியுடன் கூட வெளியே சொல்ல கூடாது, என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட எஃ.ஐ.ஆர் விவரங்களை வெளியிடக் கூடாது என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்களாக இந்த சமூகம் ஒதுக்கி வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close